உள்நாடுசூடான செய்திகள் 1

ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்!

நாட்டில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் சுமார் 2,000 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம், 7,152 பேர் காயமடைந்துள்ளனர். முறையற்ற விதத்தில் வாகனம் செலுத்துதல், உள்ளிட்ட செயற்பாடுகளினால் வீதி விபத்துகள் ஏற்படுகின்றன.

கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் மாதம் 15ஆம் திகதி வரையில் வீதி விபத்துக்களினால் 1,133 பேர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில், வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் அவசியமற்ற மேலதிக உதிரிபாகங்களை நீக்குவது எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை 3,278ஆக உயர்வு

திருகோணமலையில் நிலநடுக்கம்

editor

கொழும்பு வந்தார் யுவன் சங்கர் ராஜா!