உள்நாடு

ஜீவன் தொண்டமானை பரிந்துரைக்கும் ஆவணம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

(UTV | கொழும்பு) – அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு பின்னர், நுவரெலியா மாவட்ட வேட்புமனுவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு அவரது புதல்வன் ஜீவன் தொண்டமானை பரிந்துரைக்கும் ஆவணம், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த ஆவணத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் இன்று(06) கையளிக்கவுள்ளது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கடந்த 26 ஆம் திகதி திடீர் உடல்நலக் குறைவினால் காலமானார்.

இதனையடுத்து, நுவரெலியா மாவட்ட வேட்புமனு பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு அவரின் புதல்வன் ஜீவன் தொண்டமானை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பரிந்துரைத்துள்ளார்.

Related posts

இரண்டு நீதியரசர்கள் மற்றும் நீதி மன்றத்தலைவர் இன்று சத்தியப்பிரமாணம்

பணம் பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் : நடவடிக்கை என்கிறது SJB

யாழில் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!