அரசியல்உள்நாடு

ஜீவன் எம்.பியின் திருமண நிகழ்வில் பங்கேற்க முன்னாள் ஜனாதிபதி ரணில் நாளை இந்தியா பயணம்

இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (21) இந்தியா செல்லவுள்ளார்.

ஐ.தே.கவின் முக்கிய பிரமுகரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெணான்டோ இந்த தகவலை வெளியிட்டார்.

எனவே, நுகேகொடை கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க பங்கேற்பது சாத்தியமில்லை எனவும், இரண்டாம் தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதே ரணிலின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் இலங்கையிலுள்ள மேலும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், இராஜதந்திரிகள் பங்கேற்கவுள்ளனர்.

Related posts

இருப்பது போதாதா ? புதிய வரிகளை விதித்து ஏன் மக்களை நெருக்கடிக்குள் தள்ளுகிறீர்கள் ? சஜித் பிரேமதாச கேள்வி

editor

இரத்தினபுரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

editor

பொய்யுரைக்கும் இந்த அரசாங்கத்துக்கு மக்கள் தமது வாக்குகளால் திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் – சஜித் பிரேமதாச

editor