உத்தரகண்டில் பள்ளத்தில் ஜீப் வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம், பித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள முவானி நகரில் உள்ள பாலத்தில் 13 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பொலேரோ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.