உள்நாடு

ஜீப் வண்டி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 9 பேர் வைத்தியசாலையில்

அனுராதபுரம் – கண்டி பிரதான வீதியின் மரதன்கடவெல பிரதேசத்தில் ஜீப் வண்டி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில், வெளிநாட்டு தம்பதியினர் உட்பட 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி வெளிநாட்டுத் தம்பதியினரை ஏற்றிச் சென்ற ஜீப் வண்டி, எதிர்த் திசையில் வந்த வேன் ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் வெளிநாட்டு தம்பதியினரும், ஜீப் வண்டியின் சாரதியும் படுகாயமடைந்துள்ளனர்.

அத்துடன் வேனில் பயணித்த ஏனையவர்களும் காயமடைந்து சிகிச்சைக்காக மரதன்கடவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் மரதன்கடவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையம் மூடுவது குறித்து தீர்மானம் இன்று

கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தல்

சந்தையில் தேங்காய் எண்ணெய் மாபியா