உள்நாடுபிராந்தியம்

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு – இரு பிள்ளைகள் வைத்தியசாலையில்

கரையோரப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் இன்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 44 வயதான ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இத்துப்பாக்கிச் சூட்டின் போது சிறுவன் ஒருவனும் சிறுமி ஒருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜிந்துப்பிட்டி ‘125 வத்தை’ பகுதியிலேயே இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த குழுவினர் இத்துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

பாராளுமன்றம் திருடர்களின் குகை என தெரிவிப்பதற்கு ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை – ரணில்

editor

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் மனு 30 ஆம் திகதி விசாரணைக்கு

editor

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா

editor