உள்நாடு

ஜிந்துபிட்டியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி – இரண்டு பிள்ளைகள் காயம் – பெண் உட்பட ஐவர் கைது

ஜிந்துபிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொலை செய்து, இரண்டு பிள்ளைகளுக்கு காயங்களை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (19) மற்றும் நேற்று முன்தினம் (18) ஆகிய தினங்களில் கரையோரப் பொலிஸ் நிலைய (Foreshore Police) அதிகாரிகளால் ஜிந்துப்பிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, இக்குற்றத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்தமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் 4 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 3 சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் சந்தேக நபர் 49 வயதுடையவர் என்பதோடு, ஏனைய சந்தேக நபர்கள் 18, 33, 40 மற்றும் 43 வயதுடைய கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேக நபர்கள் நேற்று (19) புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், அவர்களில் ஒரு சந்தேக நபரை 23 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளது.

ஏனைய சந்தேக நபர்கள் மற்றும் பெண் சந்தேக நபர் ஆகியோர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கரையோரப் பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு பிரிவு குற்ற விசாரணைப் பணியகம் ஆகியவை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

Related posts

சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு

பஸ் மோதியதில் 7 வயது சிறுவன் பரிதாப மரணம்

editor

இலங்கையில் சிறுநீரக நோயால் தினமும் ஐந்து பேர் உயிரிழக்கும் அபாயம்

editor