உள்நாடு

ஜயந்தவின் பதவி விலகல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

(UTV | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவின் பதவி விலகல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, அண்மையில் தான் வகித்த இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்தார்.

அவரது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் ஏற்றுகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதேவேளை, முன்னதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவும் தனது அமைச்சுப் பதவியிலிருந்து ஜனாதிபதியினால் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தமானி அறிவித்தல் இங்கே

Related posts

நேற்று மாத்திரம் 3,518 PCR பரிசோதனை

மாணவன், மாணவியை கொடூரமாக தாக்கிய தேரரால் சர்ச்சை!

வடமத்திய மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

editor