அரசியல்

ஜப்பான் வெளிவிவகார அமைச்சரை சந்தித்த அநுர

ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவுக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் TSUGE Yoshifumiக்கும் இடையிலான சந்திப்பு இன்று (22) பிற்பகல் ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இன்றளவில் இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்தும் இரு நாடுகளுக்கு இடையில் நீண்டகாலமாக இருந்துவருகிற நட்புறவு தொடர்பாகவும் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளின் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்டது.

இதன்போது ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் தென்கிழக்கு மற்றும்  தென்மேற்கு ஆசிய விவகாரங்கள் திணைக்களத்தின் தென்மேற்கு ஆசியப் பிரிவின் பணிப்பாளர் Tsutsumi Taro, அப்பிரிவின் பிரதி பணிப்பாளர் IWASE Kiichiro உட்பட உத்தியோகத்தர்களும் தேசிய மக்கள் சக்தியின் ஜப்பான் குழுவின் உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்

editor

அனைத்து பிள்ளைகளுக்கும் மிக உயர்ந்த தரத்திலான கல்வியை வழங்குவதே எமது நோக்கம் – பிரதமர் ஹரிணி

editor

ஜனாதிபதி வேட்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ள திட்டம்.

editor