உள்நாடு

ஜப்பான் வாகன இறக்குமதியில் மோசடி – ஒருவர் கைது!

20 மில்லியன் ரூபா பெறுமதியான பாரிய வாகனங்களை ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சந்தேகத்தில் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

மகரகமவில் வசிக்கும் சந்தேக நபர், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 18 வாகனங்களுக்கான முற்பணம் செலுத்துவதைத் தவிர்த்து, அதன் மூலம் அந்தப் பரிவர்த்தனைகளுக்குத் தேவையான பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைகளில் சந்தேக நபர் ஜப்பானில் இருந்து இலங்கைக்கு மொத்தம் 68 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Related posts

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2000 ஆக அதிகரிப்பு,

மூதூரில் இரண்டு பெண்கள் வெட்டிக் கொலை

editor

ரஞ்சன் ராமநாயக்க இன்று நீதிமன்ற முன்னிலையில்