உலகம்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. ரிக்டர் அளவில் 6.2 என நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஜப்பானின் நிஷினூமோட்டிலிருந்து 54 கிமீ தொலைவில் நிலநடுக்கம் பதிவு பதிவாகியுள்ளது.

இது பிலிப்பைன்ஸ் கடல் பகுதி என்றாலும், கரைக்கு நெருக்கமாக இருக்கிறது.

அந்நாட்டு நேரப்படி இரவு 11.03 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது.

தேசிய நில அதிர்வு மையத்தின் (NCS) படி, கியூஷு தீவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலஅதிர்வு உணரப்பட்டது.

இதுவரை பெரிய அளவிலான சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. மூன்றாவது பெரிய தீவு கியூஷு அடிக்கடி நில அதிர்வுவுக்கு உள்ளாகும் இடமாகும்.

தற்போதைய நிலநடுக்கத்திற்கு பின்னர், உள்ளூர் நிர்வாகம் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், சாத்தியமான நிலநடுக்கங்களுக்குத் தயாராக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியது

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நாடாளுமன்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது

அகதிகள் விடயத்தல் அமெரிக்கா கருணை