வகைப்படுத்தப்படாத

ஜப்பானின் பல நகரங்களில் பாலியல் வன்முறைக்குள்ளானவர்கள் ஆர்ப்பாட்டம்

(UTV|JAPAN)  பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜப்பானில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி சமீபத்தில் 19 வயது மகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய தந்தையை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளமை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஜப்பானின் ஒன்பது நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ள பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சட்டங்களில் சீர்திருத்தங்களை கோரியுள்ளனர்.

மேற்படி பூக்களையும் மீடு- யூடு போன்ற பதாகைகளையும் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இவர்கள் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

மன்னாரில் 29 வயதான இளைஞர் கொலை

එංගලන්තය සහ නවසිලන්තය සමඟින් 2019 ලෝක කුසලාන තරගාවලිය අදයි

யானை தந்தங்களுடன் மூன்று பேர் கைது