உள்நாடு

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரோஹிதவுக்கு அறிவித்தல்

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக ரோஹித போகொல்லாகம பதிவு செய்துள்ள முறைப்பாட்டிற்கமைய குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரவியின் முன்மொழிவுக்கு அரசாங்கம் உடன்படுவதாக பிரதமர் ஹரிணி தெரிவிப்பு

editor

இனி தவணைப் பரீட்சைகள் வருடத்திற்கு ஒருமுறை மாத்திரமே- கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

கொரோனா நோயாளர்களின் தற்போதைய நிலவரம்