சூடான செய்திகள் 1

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலிருந்து பிரதமர் வெளியேறினார் (UPDATE)

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று(16) காலை முன்னிலையான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுமார் ஒன்றரை மணி நேரம் சாட்சியம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மீண்டும் இன்று மதியம் 1.15 க்கு முன்னர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையாகவுள்ளார்.

————————————————–(UPDATE)

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பிரதமர் முன்னிலை

(UTVNEWS|COLOMBO) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று(16) முன்னிலையாகியுள்ளார்.

விவசாயத்துறை அமைச்சை பராமரித்துச் செல்வதற்காக ராஜகிரியில் அமைந்துள்ள தனியார் கட்டிடம் ஒன்றை பெற்றுக் கொண்டமை தொடர்பில் முறைப்பாடு ஒன்றிற்கு அமைய பிரதமருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சஜித் ஆட்சிக்கு வந்தால் மேலும் 50,000 வீடுகளை அமைக்க இந்தியா நிதி வழங்கும் [VIDEO]

தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரத்தின் மூலம் தரவுகளை திருட முற்பட்ட 4 வெளிநாட்டவர்கள் கைது

மன்னார் எருக்கலம்பிட்டி, பாதைக்கு 18 கோடி ஒதுக்கீடு