வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று இந்தியா விஜயம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

சர்வதேச சூரியசக்தி ஒருங்கிணைப்பு சங்கத்தின் முதலாவது மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி அங்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் மற்றும்  இந்தியா இணைந்து இந்த மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளன.

பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மெக்ரோன் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் அழைப்பை ஏற்று அங்கு செல்லும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.

முப்பது நாடுகளின் அரச தலைவர்களும், 500 இராஜதந்திர மட்டப் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

No evidence to back allegations against Dr. Shafi – CID

பப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம்

உதட்டை சுற்றியுள்ள கருமையை போக்க என்ன செய்யலாம்?