வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி மஹாநாயக்க தேரர்கள் இன்று சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட சங்க சபை பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெறவுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அஸ்கிரிய மகாபீட செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

மல்வத்துபீட மஹாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மஹாநாயக்கர் மற்றும் அஸ்கிரிய பீட மஹாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர், ராமானிக்க நிக்காயே மஹாநாயக்கர் நாபானே போமசிரி தேரர், அமரபுர நிகாயே மஹாநாயக்க கொடுகொட தம்மாவாச மஹாநாயக்கர் உள்ளிட்ட சங்க சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிக்குகளும் இதில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, அரசியல் மற்றும் தேசிய ரீதியில் முக்கியம் வாய்ந்த பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மஹாநாயக்கர்கள் இணைந்து மூன்று தீர்மானங்களை மேற்கொண்டனர்.

இதன்படி, புதிய அரசியல் அமைப்பு மற்றும் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தேவையில்லை என்பதுவும், பழைய முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் என்றும் மற்றும் சைட்டம் பிரச்சினைக்கு உடன் தீர்வு காணும் பொருட்டு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் அறிவித்தனர்.

இந்த நிலைப்பாடுகளை ஜனாதிபதியிடம் கையளிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெள்ளை மழையில் நனையும் சவுதி…

Navy apprehends a person with heroin

Cabinet approval to set up Prison Intelligence Unit