வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் அழைப்பாணை

(UDHAYAM, COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டுக்கு அமைய ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்திநாயக்கவிற்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முறைப்பாட்டில் முதலாம் மற்றும் இரண்டாம் சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டுள்ளவர்கள், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க் கட்சி தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவும் ஆகும்.

இதன்படி இதற்கு முன்னரும் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு ஆழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, கடமைகள் காரணமாக சாட்சியாளர்கள் இருவரும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை  என அறிவித்துள்ளார்.

இதன்படி மீண்டும் அழைப்பாணை விநியோகிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கு, எதிர்வரும்  டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை தாமதப்படுத்த அநேகமானோர் ஆதரவு

රුහුණු විශ්වවිද්‍යාලයේ පීඨ කිහිපයක අධ්‍යයන කටයුතු අද ඇරඹේ

‘Ali Roshan’ remanded