அரசியல்

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக அமைச்சரவை அங்கீகாரம்

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக இலங்கை அரசியல்யாப்பில் காணப்படும் குறைகளை நீக்கி, திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி அரசியல் யாப்பில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பதவிக் காலம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஆறு ஆண்டுகளுக்கு மேல்’ என்ற சொற்றொடருக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் என்ற சொற்றொடரை இணைக்க ஜனாதிபதி யோசனை முன்வைத்திருந்தார்.

இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

திலித் ஜயவீரவுக்கு அதிகரிக்கும் ஆதரவு

editor

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

editor

நான்கு இராஜாங்க அமைச்சர்கள் பதவிநீக்கம் – ஜனாதிபதி ரணில்

editor