அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 160 பேரும் பொது நிதியை தவறாக பயன்படுத்தியுள்ளார்கள் – இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த உதய கம்மன்பில

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று (29) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.

ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாதாந்திர சம்பளத்தை கட்சி நிதிக்கு மாற்றி மேற்கொள்ளும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உதய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர கொடுப்பனவை தமது விருப்பப்படி செலவிட முடியாது என்று கூறினார்.

அதன்படி, ஆளுங்கட்சியின் 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாதத்திற்கு 03 கோடி ரூபாய்க்கு மேல் பெற்று அதை கட்சி நிதியில் வரவு வைத்து அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது பொது நிதியை தவறாக பயன்படுத்தும் செயலாகும் எனவும், இந்த விடயம் குறித்து விசாரணை நடத்த கோரியும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் அவர் முறைப்பாடு அளித்துள்ளார்.

உதய கம்மன்பில மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“தொலைபேசி கட்டணம், எரிபொருள் மற்றும் அலுவலக பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் இந்தப் பணத்தை கட்சி நிதிக்கு அனுப்பி அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவதாகும்.

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 160 பேரும் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதில் மாதத்திற்கு 3 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது.

எனவே, இந்த 160 பேரிடமும் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி இன்று நாங்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வந்துள்ளோம்.” என்றார்.

வீடியோ

Related posts

சதித்திட்டம் தீட்டியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை – சிவநேசதுரை சந்திரகாந்தன்

editor

ஊடகவியலாளர் எக்னெலிகொட வழக்கு : 9 இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் பிணை இடைநிறுத்தம்

ஜனாதிபதி அநுரவின் டிஜிட்டல் பொருளாதார ஆலோசகராக ஹான்ஸ் விஜயசூரிய நியமனம்

editor