அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை பொதுவெளியில் திரையிடத் தடை

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொது வெளியில் திரையிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ உரையாற்றுக்கையில்,

தேர்தல் முடிவுகளை பொது வெளியில் திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது வெளியில் திரையிடுவதால் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படலாம். எனவே, வன்முறைகளைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்தவாறு தனிப்பட்ட முறையில் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Related posts

சந்திரிக்கா மீதான குண்டுத்தாக்குதல் – 22 வருடம் சிறையிலிருந்த ஐயர் மன்னிப்பில் விடுதலை

மைதிரியிடம் இன்றும் CIDயில் வாக்குமூலம்!

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் கைது

editor