அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 1,745 முறைப்பாடுகள் பதிவு.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை) 1,745 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 711  முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 965 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 10 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 59 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

Related posts

பிரதமரின் சவாலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர் சவால்

மன்னாரில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட கருத்து தொடர்பில் முறைப்பாடுகள் – கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு

editor

கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களை நீக்குவதற்கு யாப்பில் இடமிருக்கின்றது – சாணக்கியன் எம்.பி

editor