அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் – சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 108 பேர் கைது – நிஹால் தல்துவ

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 14 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொலிஸாருக்கு 464 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அவற்றில், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 48 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 316 முறைப்பாடுகளும் அடங்குகின்றன.

மேலும், நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமாக ஒட்டப்பட்ட 6,662,676 சுவரொட்டிகள் பொலிஸரால் நீக்கப்பட்டுள்ளதுடன் 219,203 சுவரொட்டிகள் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத கட்டப்பட்ட 1,609 பேனர்கள் பொலிஸரால் நீக்கப்பட்டுள்ளதுடன் 1,176 பேனர்கள் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.இதேவேளை, சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட 1,613 கட்டவுட்கள் பொலிஸரால் நீக்கப்பட்டுள்ளதுடன் 1,632 கட்டவுட்கள் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

புத்தளம் நகர முன்பள்ளி ஆசிரியைகளை புத்தளம் மாநகர மேயர், பிரதி மேயர், உறுப்பினர்கள் சந்தித்தனர்.

editor

இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்துவது தொடர்பில் அறிவிப்பு

குருந்தூர்மலை, வெடுக்குநாறி  ஆலயங்களில் சைவ மக்கள் சுதந்திரமாக வழிபாடு செய்யலாம் – விதுர விக்கிரமநாயக்க