அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடைபெறும் : நிமால் லன்சா

அரசியல் சாசனத்தின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடைபெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லன்சா தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு எவ்வித உத்தேசமும் அரசாங்கத்திற்கு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் சாசனத்திற்கு அமைவாக ஜனநாயகத்தை பாதுகாத்து ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தலை ஒத்தி வைத்தல் தொடர்பில் எந்தவொரு தரப்பினரும் தங்களது தனிப்பட்ட கருத்தை வெளியிடலாம் எனினும் அது அரசாங்கத்தின் நிலைப்பாடாகாது என நிமால் லன்சா சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் சாசனத்தின் பிரகாரம் உரிய காலத்தில் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணைக்குழுவின் கடமையாகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிமல் லன்சா தலைமையில், ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து, அடுத்த ஜனாதிபதி தேர்தலை இல்லாக நோக்கி அரசியல்  கூட்டணியொன்றை அமைத்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

புத்தாண்டை முன்னிட்டு விஷேட ரயில் சேவை

வடக்கிற்கான ரயில் சேவை பாதிப்பு

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு