உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல்: அரசியல்வாதிகளுக்கு விடுக்கப்படவுள்ள அதிரடி தடை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள மாதங்களில் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளின் ​போது அரசியல்வாதிகளை அழைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் ஒன்றின் மூலம் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளது.

பிரதேச செயலக மட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதன் பெயரில் அரசியல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படக்கூடும் என பெப்ரல் அமைப்பினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

மேலும், பிரசார நடவடிக்கைகள் ஆளுங்கட்சிக்கு சார்பானதாக அமைந்துவிடும் எனவும் குறித்த அமைப்பு கூறியிருந்தது.

இதற்கமைய, தேர்தல்கள் ஆணைக்குழு இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்துக்கு கடிதம் மூலம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யோஷித ராஜபக்ஷவிற்கு பதவி உயர்வு

நாளைய மின்வெட்டு பற்றிய விபரம் இதோ!  

அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா பதவி இராஜினாமா