உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவுறுத்தல்!

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

நேற்று (18) பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றதாகவும், இதன்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் பணிகளை விரைவில் நிறைவு செய்து ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அமைச்சரவையில் அறிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் உட்பட மூன்று மொழிகள் பேசக்கூடிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

Related posts

ரயிலில் மோதி காட்டு யானை உயிரிழப்பு

editor

தங்க பிஸ்கட்களுடன் விமானப்படை புலனாய்வு அதிகாரி கைது!

editor

அனைத்து மருந்தகங்களை உடனடியாக மூடுமாறு அறிவித்தல்