அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலில் போட்டி – ரணில் அதிரடி அறிவிப்பு.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்கான கட்டுப் பணத்தை ஏற்கனவே செலுத்திவிட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.

காலி மாநகர சபை மைதானத்தில் தற்போது இடம்பெற்று வரும் “ஒன்றாக வெல்வோம் –  காலியில் நாம்” பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்களுக்கான சிறந்த இலங்கையை உருவாக்க அனைத்து அரசியல்வாதிகளும் அரசியல் பேதங்களை விடுத்து ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி இதன்போது கோரியுள்ளார்.

Related posts

முல்லைத்தீவு மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம்- அரசிடம் ரிஷாட் கோரிக்கை

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சமையல் எரிவாயு குறித்து விசேட குழு