(UDHAYAM, COLOMBO) – பொலன்னறுவை மாவட்ட கிராம அலுவலர்களுக்கு டெப் கணனிகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நேற்று முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்றது.
தொலைதொடர்புகள், டிஜிற்றல் உட்கட்டமைப்பு அமைச்சின் வழிகாட்டலில் ‘திறன் சமூக வட்டம்‘ செயற்திட்டத்தின் கீழ் இந்த டெப் கணனிகள் வழங்கப்படுகின்றன. அதனை குறிக்கும்முகமாக தமன்கடுவ, திம்புலாகல மற்றும் ஹிங்கிராக்கொட பிரதேச செயலக பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கிராம அலுவலர்கள் மற்றும் கிராம பிரதிநிதிகள் சிலருக்கு ஜனாதிபதியினால் டெப் கணனிகள் வழங்கப்பட்டன.
தொழில்நுட்ப அறிவுடனான சமூகத்தை உருவாக்கும் இந்த செயற்திட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப முகவரகத்தின் தலைவி திருமதி சித்ராங்கனி முபாரக் கலந்துகொண்டார்.
