உள்நாடு

ஜனாதிபதி செயலகத்திற்கு உள்நுழையும் வீதிகளுக்கு பூட்டு, பலத்த பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் பொலிசார் வீதித்தடைகளை பயன்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.

குறித்த பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ஏனைய இடங்களில் பணிபுரிபவர்களின் வாகனங்களை சோதனையிட்ட பின்னரே அவர்கள் வீதிக்கு அனுமதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், லேக் ஹவுஸ் முன்றலில் உள்ள நெலும் மாவத்தை பகுதி போக்குவரத்துக்காக முற்றாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தற்போது கலதாரி ஹோட்டலுக்கு அருகாமையில் பொலிஸார் வீதித் தடைகளை பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

நான்காவது டோஸ் யாருக்கு?

BREAKING NEWS – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டது

editor

சனத் நிஷாந்தவின் மரணம் – முக்கிய தகவலை வெளியிட்ட சாரதி