வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி இன்று இந்தோனேசியா பயணம்

(UDHAYAM, COLOMBO) – இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவுக்குச் செல்ல உள்ளார்.

இந்து சமுத்திரத்தை அமைதியான, நிலையான சௌபாக்கியமிக்க பிராந்தியமாக மாற்றியமைத்தல், கூட்டு ஒத்துழைப்பை

பலப்படுத்தல் என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை மாநாடு நடைபெறுகிறது. இந்துசமுத்திர சுற்றுவட்டத்தில் உள்ள நாடுகள் அமைப்பின் 20வது ஆண்டு நிறைவு நிகழ்வில் அரச தலைவர்களின் மாநாடு நாளை இந்தோனேசியாவில் இடம்பெறவுள்ளது. இதற்கான தீர்மானம் 2015ம் ஆண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தற்போது அங்கு சென்றுள்ளார்.

இவர் இந்துசமுத்திர பிராந்திய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.

சமுத்திரக் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வர்த்தகம், முதலீடுகளுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துதல், கடற்றொழில் நடவடிக்கை குறித்த முகாமைத்துவம், இடர்களைக் கட்டுப்படுத்துல், கல்வி,விஞ்ஞானம், தொழில்நுட்பம், கலாசார விடயங்களை பரிமாறிக் கொள்ளல் உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பில் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்துசமுத்திர சுற்று நாடுகளின் அமைப்பு என்பது இந்துசமுத்திர வலய நாடுகளுக்கு இடையிலான பொருளாதார புரிந்துணர்வு, பொருளாதார மேம்பாட்டுக்கான வசதிகளை ஏற்படுத்தல் போன்ற விடயங்களைக் கொண்டதாகும். இந்தச் சங்கத்தின் ஆரம்ப உறுப்பினரான இலங்கை 2003, 2004ம் ஆகிய ஆண்டுகளில் முறையாக நான்காம், ஐந்தாம் அமைச்சரவைக் கூட்டத்தை கொழும்பில் நடத்தி அதற்கு அனுசரணையும் வழங்கியிருந்தது.. தற்பொது இந்த அமைப்பில் 21 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. 7 நாடுகள் இதில் கலந்துரையாடல் பங்காளிகளாகச் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

Microsoft நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

Term of Presidential Commission probing into corruption and malpractices extended

ரஷ்ய இராணுவ விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு