உள்நாடு

ஜனாதிபதி – இந்திய பிரதமர் இடையே சந்திப்பு

(UTV |  டோக்கியோ) – ஜப்பானின் டோக்கியோவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக இரு நாட்டு தலைவர்களும் வருகை தந்திருந்த போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் பத்து நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உத்தியோகபூர்வமற்ற மட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்திய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்தும் இந்தியப் பிரதமர் கேட்டறிந்தார்.

Related posts

கிராம சேவகர்களது பணிப்புறக்கணிப்பு இரத்து

குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு – மட்டக்களப்பு மக்கள் கவலை

editor

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்!