இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41(1) வது பிரிவின்படி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், கடல்சார், துறைமுகங்கள் மற்றும் விநியோக அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகராக கலாநிதி மஹிந்த பராக்கிரம திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று வியாழக்கிழமை (08) முற்பகல் கையளித்தார்.
கலாநிதி மஹிந்த பராக்கிரம திசாநாயக்க, கடல்சார் மற்றும் விநியோகத் துறையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அனுபவம் வாய்ந்த நிபுணராவார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான மாநாடு உட்பட சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடனும் அவர் பணியாற்றியுள்ளார்.
இந்த புதிய பதவியில் அவர் கௌரவ அடிப்படையில் பணியாற்ற இணைந்துள்ளார்.
