சூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஆசிய கலாச்சாரங்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் உரையாற்றவுள்ளார்

(UTV|COLOMBO) இன்று சீனாவின் பீஜிங் நகரில் இடம்பெறவுள்ள ஆசிய கலாச்சாரங்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார்.

அதன்போது இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் நாட்டின் எதிர்கால நலனிற்காக முன்னெடுக்கப்படவுள்ள தீர்மானங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி சர்வதேச நாடுகளின் தலைவர்களை தெளிவுபடுத்தவுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற துன்பியல் சம்பவத்தை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்துள்ள பின்னணியில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள மற்றும் முதலீடுகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள தரப்பினருக்கு நம்பிக்கையளிப்பதற்கும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தவுள்ளார்.

Related posts

தாமதமான தொடரூந்து போக்குவரத்து வழமைக்கு

விசேட ரயில் சேவைகள் அமுலுக்கு

மீனவர்களுக்கான அறிவுறுத்தல்!!!