அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அனுரவுக்கு சவுதி தலைவர்கள் வாழ்த்து

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய தேர்தல் வெற்றிக்கு சவுதி அரேபியாவின் முக்கிய தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் மற்றும் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான் ஆகியோர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சு ‘X’ தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

“இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் @KingSalman மற்றும் HRH பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான் ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக அரசியலமைப்புப் பிரமாணம் செய்துகொண்ட அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.” என்று சவூதி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

‘பண்டிகைக் காலத்தில் 1 கிலோ அரிசி ரூ.300 ஆக உயரலாம்’

புதிய விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடத்தப்பட்ட வர்த்தகர்!