அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர மாலைத்தீவு புறப்பட்டார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஜனாதிபதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாலைதீவில் தங்கியிருப்பாரென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதுடன் இரு தரப்பினதும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஏற்படுத்திக்கொள்ளப்படவுள்ளன.

Related posts

8 மாவட்டங்களில் 401 கொவிட் தொற்றாளர்கள்

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்!

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல், மோசடி – விசாரணைகள் ஆரம்பம் – வசந்த சமரசிங்க

editor