ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்பாக தான் தெரிவித்த அவதூறு கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு தெரிவிப்பதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி இன்று (29) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அறிவித்தார்.
10 பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி அநுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, திஸ்ஸ குட்டியாராச்சி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்தனர்.