அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் பேரணியில், பங்கேற்கப்போவதில்லை என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய அரசியல் புள்ளிகளை பங்கேற்க வைப்பதற்கு பகீரத முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையிலே, மனோகணேசன் இவ்வாறு அறிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த அவர் சில காரணங்களுக்காக இந்த பேரணியில் பங்கேற்பதில்லை எனத் தீர்மானித்துள்ளோம்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் முடிவு குறித்து எனக்கு உறுதியாக எதுவும் தெரியாது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷவுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதை நிராகரிக்கிறேன்.
எந்த அரசியல்வாதிகளுடனும் எந்தப் பிரச்சினையும் எனக்கில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவின் தோளைப் பிடித்துக்கொண்டு, அவர்கள் அனைவரும் நல்ல நண்பர்கள் என்று கூறிய எம்.பி. கணேசன், ஜனாதிபதி அநுரவும் எனக்கு நல்ல நண்பர்தான் என்றார்.
