அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜனாதிபதி அநுர அமெரிக்காவை சென்றடைந்தார்!

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து புறப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (23) அமெரிக்காவை சென்றடைந்துள்ளார்.

அமெரிக்க நேரப்படி காலை 8:50 மணியளவில் அமெரிக்காவின் ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை அடைந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய மற்றும் அவரது குழுவினர் வரவேற்றுள்ளனர்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த விஜயத்தில் பங்கேற்றுள்ளார்.

Related posts

கானியா பாரிஸ்டருக்கு எதிரான வழக்கு சாட்சிய விசாரணைக்கு திகதி குறிப்பு

குடிவரவு – குடியகழ்வு திணைக்களம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 100 பேர் வீடுகளுக்கு