அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜனாதிபதி அநுரவுக்கும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (29) டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் டி.எம். நகதானியைச் (DM Nakatani) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விடயங்களில் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான தற்போதைய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன் போது வெகுவாக ஆராயப்பட்டது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

இன்று முதல் பேருந்து சேவைகள் மட்டு

அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மேலும் இருவர் கைது.

தமிதாவின் உடல்நலம் விசாரிக்க சஜித், மெகசின் சிறைச்சாலைக்கு