அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவிற்கு உலக வங்கி வாழ்த்து – பொருளாதார முன்னேற்றத்துக்கு தொடர்ந்து ஆதரவு

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கிக் குழுமம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் தெற்காசிய வலயத்தின் தலைவர் மார்டின் ரயிஸர், சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் வலய உப தலைவர் ரிகார்டோ புலிட் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

தற்போது இலங்கையின் பொருளாதாரம் மீளக் கட்டமைப்பதற்கு தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் அவசியம் என்பதை அறிந்துகொண்டுள்ளதோடு, பொருளாதார வளர்ச்சி,செழுமை, மற்றும் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் ஒரே அளவான முக்கியத்துவத்தை கொண்டவை என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் மிகவும் பாதிக்கப்படும் நிலையிலிருப்போரின் தேவைகளை பூர்த்தி செய்வதை போலவே அனைத்தும் உள்ளடங்களான அபிவிருத்திக்கு இலங்கையின் புதிய நிருவாகத் தலைமைக்கு உலக வங்கிக் குழுமத்தின் ஆதரவை பெற்றுத்தர அர்ப்பணிப்பதாகவும் அந்த கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம் குறித்து திலித் ஜயவீர எம்.பி யின் நிலைப்பாடு

editor

கொரோனா : 8,000ஐ கடந்தது

இன்று பிற்பகல் அனுராதபுரத்தில் நிலநடுக்கம்.