இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றையதினம் (14) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது இரத்தினபுரி மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகள் குறித்தும் மற்றும் அபிவிருத்தி பணியில் இடம்பெற்றுள்ள பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் மேலும் பல அபிவிருத்தி பணிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்களான சாந்த பத்மகுமார, சப்ரகமுவ மகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ராஜபக்ஷ, ஜனக்க சேனாரத்ன, வசந்த புஷ்பகுமார, நிலுஷா கமகே, வருண லியனகே, ஹேஷா விதானகே, பீ.ஆரியவன்ச உட்பட அரச அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்