ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (03) மாலை 5.00 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த அறிவிப்பைச் செய்திப் பணிப்பாளர் நாயகம் எச். எஸ். கே. ஜே. பண்டார விடுத்துள்ளார்.
