உள்நாடு

ஜனாதிபதியின்  புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டாம் என கோரிக்கை

(UTV|கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புகைப்படம் அல்லது கையினால் வரையப்பட்ட அவரின் உருவப்படங்களை பொது இடங்களில் காட்சிப்படுத்துவதனை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வரையப்பட்ட உருவப்படம், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களை கண்காணிப்பின்றி பாதையோரங்களில், பொது விழாக்கள் நடைபெறும் இடங்களில் காட்சிப்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தமது உருவத்தை வரையும் நபர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஜனாதிபதி, அவ்வாறு செய்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு குறித்த தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

தனிமைப்படுத்தல் நிறைவு செய்த 164 பேர் வீடுகளுக்கு

தயாசிறி ஜயசேகரவிடம் விளக்கம் கோரிய கடிதத்தை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு!

பல்கலைக்கழகங்களது ஆரம்பம் தொடர்பிலான அறிவிப்பு