உள்நாடு

ஜனாதிபதியின் செயலாளருக்கும் பிரான்ஸ் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Remi Lambert ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் நிறுவனம் ஆதரவளிக்கும் என்றும், இதற்காக எதிர்காலத்தில் நிபுணர்கள் குழுவை நாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளரிடம் பிரான்ஸ் தூதுவர் உறுதியளித்தார்.

பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தலைவர் Matthieu John இந்நிகழ்வில் பங்கேற்றார்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

சீனாவிற்கிடையிலான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

முன்பள்ளி ஆசிரியைகளுக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை – ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – இம்ரான் எம்.பி

editor

பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு