உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதம் இன்று

(UTV|கொழும்பு)- ஒன்பதாவது பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை முன்வைக்கப்பட்ட நிலையில் கொள்கைப்பிரகடன உரை தொடர்பில் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிலையியல் கட்டளை சட்டத்தின் கீழ் பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டதுடன் அது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தவும் நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் இன்று, மற்றும் எதிர்வரும் 27, 28 ஆகிய திகதிகளில் பாராளுமன்ற அமர்வுகளை முன்னெடுத்து செல்வதற்கும் கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

மாணவர்களில் 80 சதவீதமானோர் சமபோஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை

இலங்கையிலுள்ள பால்மா தொடர்பில் வெளிநாட்டில் பரிசோதனை

கித்சிறி கஹபிட்டிய கொரோனாவுக்கு பலி