உள்நாடு

ஜனாதிபதியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா நாணயத்தாள் – ஒருவர் கைது

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா போலி நாணயத்தாள்களை தயாரித்து சமூக ஊடகங்கள் ஊடாக விற்பனை செய்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் அத்துருகிரிய, கொரதொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஆஸிக்கு உறுதுணையாக நாம் இருக்கிறோம் – நாமல்

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் கைது!

editor

அபராதம் செலுத்தத் தவறிய சகல கைதிகளுக்கும் மன்னிப்பு