அரசியல்உள்நாடு

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நாளை பாராளுமன்றத்தில்

மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நாளை (24) பாராளுமன்றத்தில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இன்று (23) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழு கூட்டத்தில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் 2025.09.21ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட 2454/68 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.

Related posts

உயர்தரப் பரீட்சை – இன்று நள்ளிரவுடன் மேலதிக வகுப்புகளுக்கு தடை

editor

ரோஹிங்யா அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் – ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

editor

ஐக்கிய மக்கள் சக்தியின் ரஞ்சனுக்கு புதிய பதவி