சூடான செய்திகள் 1

ஜனாதிபதி,பிரதமருக்கு தேர்தல் ஆணைக்குழு கடிதம்

(UTV|COLOMBO)-மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடாத்துவதற்கு பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுமாறு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களும் குறித்த கோரிக்கை கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இன்று சர்வதேச அன்னையர் தினம்…அம்மா என்றழைக்காத உயிரில்லையே!

எமில் ரஞ்சன் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

இன்று(02) முதல் முதல் புதிய வீதி