சூடான செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இன்று காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணிவரையான காலப்பகுதியில் வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுக்களைக் கையளிக்க முடியும் என தேர்தலகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேநேரம், வேட்புமனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகளைத் தெரிவிக்க முற்பகல் 11 மணிமுதல் 11.30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள், நேற்று மதியம் 12 மணியுடன் நிறைவடைந்திருந்தது.

இதற்கமைய ஜனாதிபதி தேர்தலுக்காக பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களை சேர்ந்த 41 வேட்பாளர்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

Related posts

அமித் வீரசிங்க உள்ளிட்ட மூன்று பேரின் உத்தரவு செயற்படுத்தப்பட்டது

பேஸ்புக் மீதான தடை உடன் அமுலுக்கு வரும் வரையில் நீக்கம்

விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான தீர்மானம்