கிசு கிசு

ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் பொன்சேகா?

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அடிப்படை உரிமையை மறுத்திருப்பதாக தெரிவித்து பாரளுமன்ற  உறுப்பினர் சரத் பொன்சேகா உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சு பதவியை வழங்க மறுத்ததன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அடிப்படை உரிமையை மறுத்திருப்பதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று அமைச்சரவை பொறுப்பேற்றிருந்தது. எனினும், அமைச்சரவை பெயர் பட்டியலில் சரத் பொன்சேகாவின் பெயர் உள்ளடக்கியிருந்த போதிலும் ஜனாதிபதி அவரின் பெயரை நீக்கியுள்ளார்.

முன்னதாக சரத் பொன்சேகாவிற்கு அமைச்சு பதவி வழங்கப்போவதில்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போதும் ஜனாதிபதி உறுதியாக கூறியிருந்தார்.

அந்த வகையில் நேற்றைய தினம் சரத் பொன்சேகாவிற்கு அமைச்சு பதவி எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையிலேயே, ஜனாதிபதிக்கு எதிராக சரத் பொன்சேகா நீதிமன்றம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

Related posts

MV XPress Pearl அழிவுக்கு காரணம் இதுதான்

சர்ச்சையில் கருணா அம்மான்

இலங்கையர்களை கண்ணீர் ஆழ்த்தியுள்ள செல்பி புகைப்படம்…