உள்நாடு

ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி!

இலங்கையில் வாகன இறக்குமதியாளர்கள் பெருமளவில் வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், சந்தை தேவையை கருதி பெருமளவில் வாகனங்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என கார் இறக்குமதியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க அதற்கான குழு பரிந்துரைகள் கிடைத்துள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான உதவியாளர்களின் எண்ணிக்கையில் மட்டுப்பாடு

editor

பம்பலப்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

அவசரமாக கட்சி உறுப்பினர்களை அழைக்கும் மைத்திரி!